×

ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு மீண்டும் ஒத்திவைப்பு: அமைச்சர் தகவல்

திருமலை: ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணியை கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி தொடங்க மாநில அரசு முடிவு செய்தது. ஆனால் அந்த தேதியை மாற்றி கடந்த டிசம்பர் 9ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்படும் என ஆந்திர மாநில பிசி நலத்துறை அமைச்சர் செல்லுபோயினா வேணுகோபால் கிருஷ்ணா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மிக்ஜாம் புயல் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஆந்திராவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புயலால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்த ஆய்வில் அதிகாரிகள் மதிப்பீடு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பதால் டிசம்பர் 9ம் தேதி முதல் நடத்தப்படவிருந்த கணக்கெடுப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் எங்கும் இல்லாத தன்னார்வ மற்றும் செயலக அமைப்பு ஆந்திராவில் உள்ளது. எனவே புயல் பாதிப்புக்கு அரசு விரைந்து செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர் என அமைச்சர் செல்லுபோயினா வேணுகோபால் கிருஷ்ணா தெரிவித்தார்.

The post ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு மீண்டும் ஒத்திவைப்பு: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Andhra ,Thirumalai ,Sathiwari ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் வாக்கு...