×

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப்பொருள் வழங்க 5 பொறியாளர்கள் குழு: அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கை

சென்னை: நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை பொறியாளர்களை 5 குழுக்களாக பிரித்து மழையால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதி மக்களுக்கு 15 ஆயிரம் உணவு பொட்டலங்கள் உள்பட நிவாரண பொருட்களை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். சென்னையில் வரலாறு காணாத புயல், மழையால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 3வது நாளாக நிவாரண பொருட்கள், அரிசி, உணவுப் பொருட்கள், குடிதண்ணீர், பால் பொருட்கள், பிஸ்கட், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை அமைச்சர் எ.வ.வேலு வழங்கி வருகிறார்.

அதன்படி, நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தில் தயார் செய்யப்பட்ட 15000க்கு மேற்பட்ட உணவு பொட்டலங்கள் மற்றும் இதர நிவாரண பொருட்கள் சுமார் 15 லாரிகளில் ஏற்றி சென்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுவீடாக சென்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் நிவாரண பொருட்களை வழங்குவதற்கு நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடங்கிய 3 ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைத்தும் வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு பகுதிக்கும் பொறியாளர்கள் அடங்கிய 5 கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு நிவாரணப் பொருட்கடள் வழங்கப்பட்டு வருகிறது.

The post மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப்பொருள் வழங்க 5 பொறியாளர்கள் குழு: அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Minister ,AV Velu ,Chennai ,Highways Department ,Public Works Department ,Velachery ,Madipakkam ,Pallikaranai ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...