×

வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பேரிகார்டுகள்: வாகன ஓட்டிகள் அச்சம்

வேலூர்: லூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் பேரிகார்டுகள் இருப்பதாக வாகன ஓட்டிகள் அச்சம் ெதரிவிக்கின்றனர்.வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்பட பல்வேறு விதிமுறைகளை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு வேகத்தடை, எச்சரிக்கை பலகை மற்றும் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்ட தடுப்புகள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டுள்ளன. தைத்தவிர பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தேசிய, மாநில நெடுஞ்சாலையை கடக்கும் பகுதிகளில் பேரிகார்டு, மண் நிரப்பிய இரும்பு பேரல்கள் வைத்து வாகனங்கள் மெதுவாக செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சாலை விபத்தினால் ஆண்டுதோறும் ஏராளமானோர் உயிரிழக்கும் நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், வேலூர் கருகம்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை இணையும் பகுதி, சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள இடம் உள்பட பல இடங்களில் விபத்துகளை தடுக்கும் வகையில் சாலையின் இருபுறமும் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த இடங்களில் வாகனங்கள் மெதுவாக சென்றதால் பெருமளவு விபத்து தவிர்க்கப்பட்டது. னால் தற்போது அந்த பேரிகார்டுகள் வாகனங்கள் மோதி சேதமடைந்த நிலையிலும், தாறுமாறாக குறுக்கும், நெடுக்குமாக உள்ளது.

இந்த இடங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்தை ஏற்படுத்தும் அச்சம் உள்ளது. இதன்காரணமாக அனைத்து வாகன ஓட்டிகளும் வாகனங்களை ஓட்டுவதில் மிகவும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பேரிகார்டு இருப்பது தெரியவில்லை. இதனால், கனரக வாகனங்கள் பேரிகார்டு மீது மோதிவிட்டு செல்கின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகள் குறித்து, தகவல் தெரிவிக்கும் வகையில் குறியீடு மற்றும் வாகனங்களில் வேகத்தை தடுக்கும் வகையில் பேரிகார்டுகளை சரியான முறையில் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பேரிகார்டுகள்: வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Vellore National Highway ,Vellore ,Lur National Highway ,Vellore district ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...