×

2வது ஒரு நாள் போட்டி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

நார்த்சவுன்ட்:இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 5 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்ற நிலையில் 2வது போட்டி நார்த் சவுன்ட் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்றிரவு 11 மணிக்கு தொடங்கி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் 39.4 ஓவரில் 202 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.

அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் 68, ஷெர்பேன் ருதர்போர்ட் 63 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பவுலிங்கில் சாம்கரன், லிவிங்ஸ்டன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் பில் சால்ட் 21 ரன்னில் அவுட் ஆக மற்றொரு தொடக்க வீரர் வில் ஜாக்ஸ் 73 ரன் (72 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். ஆட்டம் இழக்காமல் கேப்டன் ஜோஸ் பட்லர் 58, ஹாரி புரூக் 43 ரன் அடிக்க 32.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. சாம்கரன் ஆட்டநாயகன் விருதுபெற்றார். 1-1 என தொடர் சமனில் உள்ள நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி நாளை மறுநாள் (சனி) நடக்கிறது.

The post 2வது ஒரு நாள் போட்டி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : England ,West Indies ,Dinakaran ,
× RELATED வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இலங்கையில்...