×

துரைப்பாக்கம் ஏரியில் ஆகாயத் தாமரை அகற்றும் பணி தீவிரம்: 400 டன்னுக்கு மேல் செடிகள் அகற்றம்

சென்னை: சென்னை துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கிய இடங்களில் தண்ணீர் வடிந்து வருகிறது. சீரமைக்கும் பணிகளிலும் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒக்கியம் துரைப்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியதால் சோழிங்கநல்லூர் , காரப்பாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.

ஏரியை சூழ்ந்திருக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி வீரராகவ ராவ் மேற்பார்வையில் இதுவரை 400 டன்னுக்கு மேல் அகற்றப்பட்டுள்ளது. இதனால் நீர்வழிப்பாதை சீராகி குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் வேகமாக வடிந்து வருகிறது. ஆகாய தாமரைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேடவாக்கம், பள்ளிக்கரணை பிரதான சாலையை சூழ்ந்த வெள்ள நீர் மெதுவாக வடிந்து வருகிறது. அந்த பகுதியில் போக்குவரத்து தடை பட்டிருந்த நிலையில் தற்போது வாகன ஓட்டிகள் மெதுவாக சென்று வருகின்றனர். தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேற்கு தாம்பரத்தில் உள்ள சிடியு காலணியில் தேங்கியிருந்த தண்ணீர் முழுவதுமாக வடிந்தது. அந்த பகுதியை தூய்மை படுத்தும் பணிகள் தற்போது தீவிரமடைந்திருக்கின்றன. விரைவாக மின்சாரம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தண்ணீர் வடிந்த பகுதிகளில் உரிய ஆய்வுக்கு பிறகு மின் விநியோகம் செய்யும் பணிகளில் மின் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

 

The post துரைப்பாக்கம் ஏரியில் ஆகாயத் தாமரை அகற்றும் பணி தீவிரம்: 400 டன்னுக்கு மேல் செடிகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Durai Pakkam Lake ,CHENNAI ,Duraipakkam ,Pallikaranai ,Tambaram ,Dinakaran ,
× RELATED என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால்...