×

புழல் ஏரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பாஜ சார்பில் நலத்திட்ட உதவிகள்: அண்ணாமலை வழங்கினார்

புழல்: புழல் ஏரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பாஜ சார்பில் நலத்திட்ட உதவிகளை பாஜ தலைவர் அண்ணாமலை வழங்கினார். நாராவாரி குப்பத்தில் உள்ள புழல் ஏரி கரையோரம் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமீபத்தில் பெய்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலையில் செங்குன்றம் திருவிக தெரு அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொதுச் செயலாளர் நரேஷ் குமார் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் வினோபா செல்வம், சக்கரவர்த்தி, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு 350 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நிருபர்களை சந்தித்து அவர் பேசியதாவது, ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், எம்பிக்கள், கவுன்சிலர்கள் இறங்கி வந்து தங்களை நேரில் சந்திக்கவில்லை என்பது மக்களின் கோபம். அதுவே, சென்னை முழுவதும் ஏற்படும் ஆர்ப்பாட்டத்திற்கு காரணம். எனவே, பொறுப்பில் இருப்பவர்கள் மக்களை நேரில் சந்தித்தாலே மக்களுக்கு பாதி நம்பிக்கை ஏற்படும். நம்பிக்கை இல்லாமல்தான் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள் நடைபெறுகிறது. தமிழக அரசு இன்னும் வேகமாகவும், துரிதமாகவும் செயல்பட வேண்டும். முகாமில் தங்க வைத்திருக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளனவா என மக்கள் பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட வேண்டும்.

கழிப்பறை வசதிகள், தங்கும் விடுதிகள் சரியான முறையில் உள்ளதா என உறுதி செய்யவும் தமிழக அரசு தவறிவிட்டது. பாதிக்கப்பட்ட மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு மந்தமான செயல்பாடே காரணம். இவ்வாறு பேசினார். இந்த நிகழ்ச்சியில் கருநாகராஜன், அமர் பிரசாத், சசிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புழல் ஏரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பாஜ சார்பில் நலத்திட்ட உதவிகள்: அண்ணாமலை வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Bajaj ,Maghal Lake ,Buhal ,Bahia ,President ,Bahja ,Buhal Lake ,Naravari ,Dinakaran ,
× RELATED யார் அணையப்போற விளக்குனு ஜூன் 4ல்...