×

திருமுல்லைவாயல் பகுதிகளில் மின்சார பணிகளை அமைச்சர் ஆய்வு: ஆயிரக்கணக்கானோருக்கு நிவாரண உதவி


ஆவடி: 2 தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் காரணமாக ஆவடி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து மின்சாரம் இல்லாமல், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதில் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட மிகுந்த பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இருந்து பொது மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், பாதிப்புக்குள்ளான பகுதிகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர் உள்ளிட்டோர் இரண்டாவது நாளாக பாதிப்புக்குள்ளான திருமுல்லைவாயல் 38வது வார்டுக்கு உட்பட்ட பாரதி நகர், திருக்குறள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்டு வரும் மின்சார சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து சோழம்பேடு, ஆவடி காமராஜ் நகர் பகுதியில் வேட்டைக்காரன் பாளையம் பகுதியில் ஆவடி வடக்கு பகுதி செயலாளர் நாராயண பிரசாத் தலைமையில் 500க்கும் மேற்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

இதேபோல் திருமுல்லைவாயல் தனியார் திருமண மண்டபத்தில் ஆவடி மாநகர கிழக்குப் பகுதிச் செயலாளர் பேபி சேகர் தலைமையில் 1,000க்கும் மேற்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. மற்ற பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கினர். மேலும் கடந்த இரு தினங்களாக 15,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வில் ஆவடி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகர ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான், மாநகர செயலாளர்கள் சன் பிரகாஷ், பகுதி செயலாளர்கள் பேபி சேகர், நாராயண பிரசாத், மண்டலக்குழு தலைவர்கள் அமுதா பேபிசேகர், ஜோதிலட்சுமி நாராயணபிரசாத் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post திருமுல்லைவாயல் பகுதிகளில் மின்சார பணிகளை அமைச்சர் ஆய்வு: ஆயிரக்கணக்கானோருக்கு நிவாரண உதவி appeared first on Dinakaran.

Tags : Tirumullaivayal ,Avadi ,Mikjam storm ,Dinakaran ,
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...