×

பயிர் பாதிப்பை கண்காணிக்க சிறப்பு மையங்கள்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்


திருவள்ளூர்: வட கிழக்கு பருவமழையால் ஏற்படும் பயிர் பாதிப்பை கண்காணிக்க வேளாண்மைத் துறை அலுவலகங்களில் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன் தெரிவித்துள்ளார். பருவ மழையினால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள், பூச்சி நோய் தாக்குதல்கள் ஆகியவை குறித்து விவசாயிகள் தகவல் தெரிவிக்கும் வகையில் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்கள் மற்றும் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள வேளாண்மை பயிர்களான நெல், பயறு வகைகள், நிலக்கடலை மற்றும் கரும்பு ஆகிய பயிர்களில் பருவ மழையினால் நீர் தேங்குவதற்கான வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் பயிர்களில் மழைநீர் தேங்கி அழுகாமலிருக்க தக்க வடிகால் வசதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் மழையினால் பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தங்கள் வட்டார வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு நேரடியாகவோ, கைபேசி மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். அதன்படி அம்பத்தூர் வட்டாரம் – 8220705453, பூந்தமல்லி வட்டாரம் – 9843479921, புழல் வட்டாரம் – 7010188813, சோழவரம் வட்டாரம் – 6380763879, மீஞ்சூர் வட்டாரம் – 8870654887, கும்மிடிப்பூண்டி வட்டாரம் – 9600560644, திருவள்ளூர் வட்டாரம் – 8524824483, கடம்பத்தூர் வட்டாரம் – 8940074767, பூண்டி வட்டாரம் – 9994966497, திருவாலங்காடு வட்டாரம் – 9578142369, பள்ளிப்பட்டு வட்டாரம் – 9047956752, ஆர்.கே.பேட்டை வட்டாரம் – 8489599399 ஆகிய எண்களிலும், வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் – 8072324342 ஆகிய கைப்பேசி எண்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன் தெரிவித்துள்ளார்.

The post பயிர் பாதிப்பை கண்காணிக்க சிறப்பு மையங்கள்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Associate Director of ,Department of Agriculture ,North East ,Dinakaran ,
× RELATED நாட்டுப் பசுவில் நன்மைகள் அதிகம்: வேளாண்துறை தகவல்