×

நிவாரண முகாமில் இருந்து வீடு திரும்பிய இருளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்: பேரூராட்சி மன்ற தலைவர் வழங்கினார்


வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில் நிவாரண முகாமில் இருந்து வீடு திரும்பிய பொதுமக்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். வாலாஜாபாத் பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையால் 15 வார்டுகளிலும் சாலைகளில் நீர் தேங்கியது. இதனை அப்புறப்படுத்தும் பணியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில், மழைநீர் வெளியேற்றும் பணியினை தீவிரமாக மேற்கொண்டனர். இதனையடுத்து, வாலாஜாபாத் பாலாற்றங்கரை ஒட்டியுள்ள இருளர் இன மக்களை பேரூராட்சி சார்பில் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைத்து, அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மழை நின்றநிலையில், முகாம்களில் தங்கி இருந்த மக்கள் வீடு திரும்ப தொடங்கினர். இதனையடுத்து, வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லி தர், அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கன்னிகா பழனி, இஸ்மாயில், வெங்கடேசன், கலைவாணி சீனிவாசன், தனசேகர், அசோக் குமார் மற்றும் பேரூர் திமுக இளைஞரணி நிர்வாகி சுகுமாரன் உட்பட பேரூராட்சி அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post நிவாரண முகாமில் இருந்து வீடு திரும்பிய இருளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்: பேரூராட்சி மன்ற தலைவர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Municipal Council ,President ,Walajahabad ,
× RELATED வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி...