×

ஆவின் பாலை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

சென்னை: ஆவின் பாலை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவைக்கேற்றவாறு மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக ஆவின் பால் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் பால் பாக்கெட்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை அனைத்து முகவர்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது; பால் வினியோகத்தை நேரடியாக கண்காணித்து ஒவ்வொரு பகுதிகளுக்கும் வாகனங்கள் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. இன்று காலை அனைத்து முகவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு தட்டுப்பாடு இன்றி பால் கிடைக்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவிட்டுள்ளார். ஆவின் பாலை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவைக்கேற்றவாறு மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது.

The post ஆவின் பாலை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Avin ,Minister ,Mano Thangaraj ,Chennai ,Manothankaraj ,Dinakaran ,
× RELATED வெகுஜன விரோதியாக உலக மக்களால்...