×

எதிர்க்கட்சி தலைவர் எங்கே? எடப்பாடியின் ஒருநாள் கூத்து… விமானத்தில் சேலம் பறந்தார்

சேலம்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசுடன் சேர்ந்து உதவி செய்ய வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் சேலத்திற்கு சென்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மிக்ஜாம் புயலால் சென்னை உட்பட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு போர்க்கால் அடிப்படையில் முழு வீச்சில் மீட்பு பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் ஓய்வில்லாமல் பணியாற்றி வருகிறார். மேலும், வெளி மாவட்டத்தில் இருந்தும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதற்கு முன்பு சென்னையில் வெள்ளம் வந்தபோது, அனைத்துக்கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி என பாராமல் மக்களை மீட்கும் பணியிலும், அவர்களுக்கு தேவையான பணிகளை செய்வதிலும் அக்கறை செலுத்தினர். ஆனால் நேற்று முன்தினம் ஒரே ஒரு நாள் மட்டுமே வேட்டியை மடித்துக் ெகாண்டு தண்ணீரில் இறங்கிய சென்று நிவாரண பணிகள் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ஒருநாள் கூத்துபோல் பெயருக்கு நானும் தண்ணீரில் இறங்கி சென்றேன் என்று சொல்வதற்கு செய்துவிட்டு, நேற்று ஆளே காணவில்லை.

இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட ஓ.பி.எஸ்.அணி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் கூறுகையில், ‘எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக வேட்டியை மடித்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு சேலம் வந்துவிட்டார். இந்நேரத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு பார்க்க கூடாது. எதிர்க்கட்சிதான் மக்களுக்கு துணையாக இருக்க வேண்டும். மக்களை பற்றிய கவலை எல்லாம் அவருக்கு இல்லை. கட்சியை வளர்க்க வேண்டும் என்பதில் தான் இருக்கிறார்’ என்றனர்.

The post எதிர்க்கட்சி தலைவர் எங்கே? எடப்பாடியின் ஒருநாள் கூத்து… விமானத்தில் சேலம் பறந்தார் appeared first on Dinakaran.

Tags : Salem ,EDAPPADI PALANISAMI ,RAINFALL ,Edapadi ,
× RELATED சேலம் சூரமங்கலத்தில் நீர்மோர் பந்தலை...