×

யுனெஸ்கோவில் குஜராத் கர்பா நடனம்

அகமதாபாத்: யுனெஸ்கோவின் அபூர்வமான கலாசார பாரம்பரிய பட்டியலில் குஜராத்தின் கர்பா நடனம் சேர்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் கல்வி,அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் (யுனெஸ்கோ)18வது கூட்டம் போட்ஸ்வானாவில் உள்ள கசானே நகரில் நடந்தது. இந்த கூட்டத்தில், இந்தியாவின் கர்பா நடனம் அபூர்வமான கலாசார பாரம்பரிய பிரதிநிதி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் டிவிட்டரில் பதிவிடுகையில், கலாசார பாரம்பரிய பட்டியலில் கர்பாவை சேர்த்தது குஜராத் மற்றும் இந்தியாவுக்கு கிடைத்த பெருமைமிகு தருணம் என குறிப்பிட்டுள்ளார். மதரீதியாவும், சம்பிரதாயங்கள் அடிப்படையில் வேரூன்றிய கர்பா நடனம் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைக்கும் கலாசார நடனம் ஆகும் என்று அரசு அதிகாரி தெரிவித்தார்.

The post யுனெஸ்கோவில் குஜராத் கர்பா நடனம் appeared first on Dinakaran.

Tags : Gujarat Garba ,UNESCO ,AHMEDABAD ,Gujarat ,United Nations Educational, Scientific and Cultural… ,
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி