×

மிக்ஜாம் புயல் காரணமாக, கனமழையினால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரனை பகுதிப் பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் .எ.வ.வேலு


சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக, கனமழையினால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரனை பகுதிப் பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் .எ.வ.வேலு அவர்கள் வழங்கினார்கள். இயற்கை சீற்றங்களை தடுக்க இயலாது என்றாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை இயன்றளவு குறைக்க, முன்னரே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் கடந்த 47 ஆண்டுகளாக பெய்யாத மழை, இந்தாண்டு சென்னையில் பெய்துள்ளதால், தாழ்வான பகுதிகளான வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரனை போன்றப் பகுதிகளில் வெள்ளநீர் இன்னும் முற்றிலும் வடியாத நிலை உள்ளதால், அப்பகுதி மக்களுக்கு, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் இன்றும் (6.12.2023) நிவாரணப் பொருட்கள், உணவுப் பொட்டலங்கள், குடிதண்ணீர், பால்பொருட்கள், பிஸ்கெட் போன்றவற்றை வழங்கினார்கள்.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற வெள்ளநீர் பாதிக்காத மாவட்டங்களிலிருந்து, நிவாரணப் பொருட்கள் தருவித்து, அப்பொருட்களை விநியோகம் செய்ய, சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்களும், பணியாளர்களும் நேற்று இரவே சென்னை வந்து சேர்ந்தார்கள். அவர்களின் தன்னலம் கருதாத சேவையின் மூலமாக, பள்ளிக்கரனை பகுதியில் உள்ள “காமகோடி நகர், நாராயணபுரம், சிவன்கோவில், ராஜேஷ் நகர், பாலாஜி நகர்“ ஆகிய பகுதிகளில், 10,000 குடிநீர் பாட்டில்கள், 6000 பிரட் பாக்கெட்கள், 6500 பிஸ்கெட் பாக்கெட்டுகள், 7000 பால்பவுடர் பாக்கொட்டுகள்(1கி) விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

வேளச்சேரிப் பகுதியில் உள்ள, “ராம் நகர், வி.ஜி.பி. செல்வா நகர், ஏ.ஜி.எஸ். காலனி, நேதாஜி காலனி, ஆண்டாள் நகர்“ போன்ற பகுதிகளில், 3500 குடிநீர் பாட்டில்கள், 3000 பிரட் பாக்கெட்கள், 3500 பிஸ்கெட் பாக்கெட்டுகள், 4000 பால்பவுடர் பாக்கொட்டுகள்(1கி) விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மடிப்பாக்கம் பகுதியில் உள்ள, “ராம் நகர் விரிவு, பாலாஜி நகர், கைவேலி, குபேரன் நகர், தந்தை பெரியார் நகர்“ ஆகியப் பகுதியில் 3000 குடிநீர் பாட்டில்கள், 3500 பிரட் பாக்கெட்கள், 3000 பிஸ்கெட் பாக்கெட்டுகள், 3100 பால்பவுடர் பாக்கொட்டுகள்(1கி) விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்திடமிருந்து, 20 ஆயிரம், 1/2லிட்டர் பால் பாக்கொட்டுகள் பெறப்பட்டு, வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், திருவண்ணாமலையில் இருந்து அழைத்துவரப்பட்ட சமையல் கலைஞர் மூலமாக சமையல் செய்து, சாம்பார் சாதம், பிரிஞ்சி சாதம் போன்ற கலவை சாத வகைகளுடன் 10000 உணவு பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு, வேளச்சேரி, பள்ளிக்கரனை, மடிப்பாக்கம் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயல்பு நிலை திரும்பு வரை நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும். இந்த நிகழ்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .பிரதீப் யாதவ், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன் , வேளச்சேரி பகுதிப் பொறுப்பாளர் வி.ஆர்.சுப்புலெட்சுமி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்களும், அலுவலர்களும் உடனிருந்து, நிவாரணப் பொருட்களை வழங்க பேருதவி புரிந்தனர்.

The post மிக்ஜாம் புயல் காரணமாக, கனமழையினால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரனை பகுதிப் பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் .எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Minister ,Velacheri ,Dalipakkam ,Mikjam ,Velu ,Chennai ,Madipakkam ,post ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...