×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் வட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.07) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மிக்ஜாம் புயல்’ காரணமாக கடந்த இரு தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது தொடர்ந்து நேற்று முதல் மழை நின்று இயல்பு நிலை திரும்பி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முதல் மழையின் தாக்கம் முற்றிலும் குறைந்து இயல்பு நிலை திரும்பி வந்த நிலையில், இன்று காலையில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. காஞ்சிபுரம் மாநகர பகுதிகளிலும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பொன்னேரிக்கரை, ரயில் நிலையம், வையாவூர், ஏனாத்தூர், ஓரிக்கை, செவிலிமேடு, களக்காட்டூர், விப்பேடு, விஷார், கீழம்பி, சிறு காவேரிப்பாக்கம், காரை, சிறுவாக்கம், பரந்தூர், உள்ளிட்ட லேசான மழை பெய்தது.

இந்நிலையில் கனமழை, வெள்ளம் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் தாலுக்காக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் (டிச.07) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

 

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் வட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Gunrathur ,Sriprahumutur Districts ,Kanchipuram District ,Chennai ,Kunrathur ,Sriprahumudur ,MIKJAM ,Gunratur, Sriprahumutur Districts ,
× RELATED வேலைவாய்ப்பு முகாம்