×
Saravana Stores

மிக்ஜாம் புயல் பாதிப்பு.. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை பழுதுபார்க்க மாருதி, மகிந்திரா, ஆடி நிறுவனங்கள் சிறப்பு ஏற்பாடு..!!

சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட கார்களை பழுதுபார்க்க, மாருதி, மகிந்திரா, ஆடி நிறுவனங்கள் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது;

மழை பாதிப்பு: கார்களை பழுது பார்க்க சிறப்பு ஏற்பாடு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள டீலர்கள் மூலம் கார்களை பழுது பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7 லட்சம் குறுஞ்செய்தி மூலமாகவும் கார்களின் உரிமையாளர்களுக்கு வழிகாட்டுதல் அனுப்பப்பட்டுள்ளது. கார்களை உரிமையாளர்களின் வீடுகளில் இருந்து சர்வீஸ் மையங்களுக்கு எடுத்துச் செல்ல 46 டிரக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாலையோரம் பழுதாகி நிற்கும் கார்களை பழுதுபார்க்கவும் 46 உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. கார்களுக்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தால் அதற்குரிய பணத்தை பெறுவதற்கு அந்நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய கார்கள்: செய்ய வேண்டியது என்ன?
நீரில் மூழ்கிய வாகனங்களை ஸ்டார்ட் செய்யக் கூடாது என்று நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது. நீரில் இருந்து கார்களை வெளியே அப்புறப்படுத்தி வேக்கும் கிளீனர்கள் மூலம் ஈரத்தை காய வைக்க வேண்டும். கார் பேட்டரி இணைப்பை துண்டித்துவிட்டு காரை அருகில் உள்ள சர்வீஸ் மையங்களுக்கு இழுத்துச் செல்ல வேண்டும்.

என்ஜினுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டால் பிஸ்டன்கள், சிலிண்டர்களும் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரத்தில் கார்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தால் துருக்களை அகற்றுவது கடினமான பணியாகும். கார் ஈரமாக இருக்கும்போது மின் இணைப்பு பணிகளை மேற்கொண்டால் மின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. கார் ஈரமாக இருக்கும்போது மின் இணைப்பு பணிகளை மேற்கொண்டால் மின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. என்று அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

The post மிக்ஜாம் புயல் பாதிப்பு.. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை பழுதுபார்க்க மாருதி, மகிந்திரா, ஆடி நிறுவனங்கள் சிறப்பு ஏற்பாடு..!! appeared first on Dinakaran.

Tags : Maruti ,Mahindra ,Audi ,Chennai ,Dinakaran ,
× RELATED ரூ.1500 கோடியில் நவீனமாகும் ஹூண்டாய்...