×

நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை: முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம்

கொல்கத்தா: நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை என முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை மாற்றி அமைத்த கேப்டன்களில் மிகவும் முக்கியமானவராக இருந்தவர் விராட் கோலி. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய போன்ற வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற தடுமாறி வந்த நிலையில் விராட் கோலியின் தலைமையின் கீழ் செயல்பட்ட இந்திய அணி மிகவும் ஆக்ரோஷமாக விளையாடி வெளிநாட்டு மண்ணில் பல வெற்றிகளை குவித்தது.

இந்நிலையில் விராட் கோலி கடந்த 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்த பின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அதனை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் 2022ம் ஆண்டு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகினார். கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்ட விவகாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மேலும், அப்போது, பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி மீதும் விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து விராட் கோலி மற்றும் அன்றைய பிசிசிஐ தலைவர் கங்குலி ஆகிய இருவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக கோலி கேப்டன் பதவியிலிருந்து விலக்கப்பட்டார் எனவும் இதற்கு பிசிசிஐ அரசியலே காரணம் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் “நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை” என கங்குலி கூறியுள்ளது தற்ப்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து கங்குலி கூறியுள்ளதாவது; “நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை.

டி20 போட்டிகளில் கேப்டனாக இருக்க அவர் ஆர்வம் காட்டவில்லை. எனவே நான் சொன்னேன், ‘டி20 போட்டிகளில் கேப்டனாக இருக்க விரும்பவில்லை என்றால், டி20 மற்றும் ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து நீங்கள் விலகுவது நல்லது” என கூறியுள்ளார்.

The post நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை: முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Virat Kohli ,BCCI ,president ,Ganguly ,Kolkata ,Dinakaran ,
× RELATED குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 9...