×

மம்தாவை தொடர்ந்து இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க அகிலேஷ் மறுப்பு: ராம்கோபால் யாதவ் கலந்து கொள்கிறார்

புதுடெல்லி: டெல்லியில் இன்று நடக்கும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பா.ஜவை எதிர்கொள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. காங்கிரஸ், திமு உள்பட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பிடித்துள்ளன. 5 மாநில தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் தள்ளிபோடப்பட்டது. 5 மாநிலங்களில் தெலங்கானாவில் மட்டுமே இந்தியா கூட்டணி அமைந்தது. மற்ற மாநிலங்களில் சீட் ஒதுக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது. இறுதியில் 5 மாநில தேர்தலில் மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜ அமோக வெற்றி பெற்றது. தெலங்கனாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து 4 மாதமாக நடைபெறாமல் இருந்த இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்ற முடியாது என்று அறிவித்து விட்டார். அதே போல் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் சமாஜ்வாடி மூத்த தலைவர் ராம்கோபால்யாதவ் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிஷ்குமாருக்கு உடல் நலக்குறைவு
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் இன்று நடக்கும் இந்தியா கூட்டணியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

டிசம்பர் 3வது வாரத்தில் இன்ெனாரு கூட்டம்
டெல்லியில் இன்று நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் மம்தா, அகிலேஷ் மற்றும் நிதிஷ்குமார் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் டிசம்பர் 3வது வாரத்தில் நடத்த ஏற்பாடு நடக்கிறது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களையும் காங்கிரஸ் சார்பில் தொடர்பு கொண்டு தேதி உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்றைய வெற்றி பா.ஜவின் நாளைய தோல்வியின் செய்தி
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அகிலேஷ் யாதவ், ‘இன்றைய வெற்றி பாஜவின் நாளைய தோல்வியின் செய்தியாக இருக்கலாம். அனைத்து சேனல்களும் செய்தித்தாள்களும் மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்று கூறுகின்றன. இந்த தேர்தல் முடிவுகள் மக்கள் மாற்றத்தை விரும்புவதை சுட்டிக்காட்டுகின்றன. அப்படியானால், ஏன்? டெல்லிக்கு தேர்தல் வரும்போது மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை. மத்தியபிரதேசத்தில் சில தொகுதிகளில் நாங்கள் போட்டியிட முயன்ற போது காங்கிரஸ் எங்களை அவர்களுடன் சேர்த்துக்கொள்வில்லை. ​​நாங்கள் எங்கள் கட்சியை காப்பாற்ற போராட வேண்டியிருந்தது. அதில் என்ன தவறு?. இது கடந்த கால விஷயம். இப்போது ஒரு புதிய சண்டைக்கு போராட வேண்டும். பெரிய சண்டையில் சமாஜ்வாதிகள் மற்றும் உத்தரபிரதேசம் பெரிய பங்களிப்பை வழங்கும். நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம்’ என்றார்.

The post மம்தாவை தொடர்ந்து இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க அகிலேஷ் மறுப்பு: ராம்கோபால் யாதவ் கலந்து கொள்கிறார் appeared first on Dinakaran.

Tags : AKILESH ,INDIA ,MAMDA ,RAMGOPAL YADAV ,New Delhi ,Samajwadi ,Akilesh Yadav ,India Alliance ,Delhi ,Achilesh ,Alliance ,Mamta ,Ramkopal Yadav ,
× RELATED அகிலேஷ் யாதவ் கன்னாஜ் தொகுதியில் போட்டி