×

சில்லி பாயிண்ட்ஸ்

* 2024 கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் (ஜூன் 20 – ஜூலை 24) அமெரிக்காவின் 14 நகரங்களில் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி ஃபுளோரிடா மயாமி கார்டன்சில் உள்ள ஹார்டு ராக் ஸ்டேடியத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* 2021ல் விராத் கோஹ்லியை கேப்டன் பதவியில் இருந்து தான் நீக்கவில்லை என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
* ஆஸி. பிரதமர் லெவன் – பாகிஸ்தான் அணிகள் மோதும் 4 நாள் பயிற்சி ஆட்டம் கான்பெராவில் இன்று காலை 5.00 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

* விஜய் ஹசாரே டிராபி தொடரின் காலிறுதியில் விளையாட ராஜஸ்தான், அரியானா, தமிழ்நாடு, மும்பை, விதர்பா, கர்நாடகா அணிகள் தகுதி பெற்றுள்ளன. கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், பெங்கால் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட உள்ளன.
* அயர்லாந்து அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமுக வீரர்கள் பிரையன் பென்னட், டிரெவர் க்வாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

The post சில்லி பாயிண்ட்ஸ் appeared first on Dinakaran.

Tags : 2024 Copa America football ,United States ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!