×

யானைகள் துரத்தியதால் அலறியடித்து ஓடிய மக்கள்

தேன்கனிக்கோட்டை: கர்நாடக வனப்பகுதி பன்னார்கட்டா தேசிய பூங்கா வனப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த 100 யானைகள், ஜவளகிரி வனப்பகுதி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வந்துள்ளன. அவை நான்கு பிரிவுகளாக பிரிந்து திரிகின்றன. இதில் குட்டிகளுடன் 40 யானைகள், நொகனூர் காட்டில் முகாமிட்டுள்ளன. இங்கு முகாமிட்டுள்ள யானைகள் நேற்று முன்தினம் இரவு நொகனூர் வனப்பகுதியில் கூட்டமாக வனப்பகுதியிலிருந்து வெளியே வந்து மரகட்டா, நொகனூர், தாவரகரை, ஆலல்லி, பூதுகோட்டை, சாப்பராணப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் ராகி, துவரை, முட்டைகோஸ், தக்காளி, பீன்ஸ் தோட்டங்களை சேதப்படுத்தின.

நேற்று காலை ஆலல்லி கிராமம் அருகே வந்த 2 யானைகள், மரகட்டா கிராம சாலையில் சுற்றித் திரிந்த போது, அங்கு சாலையோர கடைகளில் அமர்ந்திருந்த பொதுமக்களை விரட்டியது. யானைகளை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பட்டாசுகளை வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

The post யானைகள் துரத்தியதால் அலறியடித்து ஓடிய மக்கள் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Karnataka forest ,Bannargata National Park forest ,Javalagiri forest ,
× RELATED தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் உரசி யானை உயிரிழப்பு