×

மேட்டூர் அணை நீர்மட்டம் 67 அடி


மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து, மேட்டூர் மற்றும் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 3,000 கனஅடியாக நீடிக்கிறது. அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1827 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்றும் அதே அளவில் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் 67.20 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று 67.21 அடியானது. நீர் இருப்பு 30.35 டிஎம்சியாக உள்ளது.

 

The post மேட்டூர் அணை நீர்மட்டம் 67 அடி appeared first on Dinakaran.

Tags : Mettur ,Cauvery ,Karnataka ,Okenakal Cauvery ,Dinakaran ,
× RELATED 5 ஆண்டுகளுக்கு பின் 55 அடிக்கும் கீழே...