×

இரண்டு நாட்களாக கடலோர மாவட்டங்களை மிரட்டிய மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் பாபட்லா பகுதியில் கரையை கடந்தது.! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இரண்டு நாட்களாக கடலோர மாவட்டங்களை வாட்டிய மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் ஆந்திராவில் பாபட்லா பகுதியில் கரையை கடந்தது. அங்கு மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசுகிறது. மிக்ஜாம் புயல் தீவிர புயலாக கரையைக் கடந்த நிலையில், அடுத்த 2 மணிநேரத்தில் புயலாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்து. சென்னையில் மிச்சாங் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவிலும், வகையிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

படகுகள் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களிலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தாம்பரம், பள்ளிக்கரணை, ஹஸ்தினாபுரம், முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர், ஆலந்தூரில் ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளிலும், வடசென்னை பகுதியில் பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை, மகாகவி பாரதி நகர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், மயிலாப்பூரில் 121வது வட்டம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

The post இரண்டு நாட்களாக கடலோர மாவட்டங்களை மிரட்டிய மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் பாபட்லா பகுதியில் கரையை கடந்தது.! வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Storm Mikjam ,AP ,Babatla ,Meteorological Survey Center ,Chennai ,Andhra ,MIKJAM ,Storm ,Meteorological Center ,
× RELATED ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண்...