×

திருவாரூர் அருகே பயங்கரம் உடும்பு பிடிக்க அழைத்து சென்று பள்ளி மாணவன் அடித்து கொலை: இன்ஜினியர் கைது

திருவாரூர்: திருவாரூர் அருகே பள்ளி மாணவனை அடித்து கொலை செய்த இன்ஜினியர் கைது செய்யப்பட்டார்.திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சுமன்(42). இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். குச்சிப்பாளையத்தில் இவரது மனைவி அம்பிகா(38) மற்றும் மகன்கள் அபிஷேக்(14), அரவிந்த்(12) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

மனநிலை பாதிக்கப்பட்ட அபிஷேக் வீட்டில் இருந்து வருகிறார். அரவிந்த் நெம்மேலியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று பள்ளிக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அரவிந்தை அவரது தாய் தேடி சென்றார். அப்போது நெம்மேலியில் உள்ள குளத்தில் 2 சிறுவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.அவர்களிடம் கேட்டபோது அதே ஊரை சேர்ந்த இளவரசன்(28) உடும்பு பிடிக்க அரவிந்தை அழைத்து சென்றதாக கூறினர். அதனை தொடர்ந்து அம்பிகா தேடி சென்றபோது திருமலைராஜன் ஆற்றின் கரையில் காட்டுப்பகுதியில் அரவிந்த் சடலமாக கிடந்தார்.

அவரது சீருடை முழுவதும் நனைந்த நிலையில் தலையில் ரத்த காயத்துடன் கிடந்தார். பக்கத்தில் உள்ள மதில் சுவரில் ரத்த கறை படிந்து இருந்தது. தகவலறிந்த நன்னிலம் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வீட்டில் இருந்த இளவரசனை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரது உடையும் நனைந்து இருந்தது. ரத்த கறையும் படிந்து இருந்தது. எனவே அவர் தான் அரவிந்தை அழைத்து சென்று மதில் சுவரில் தலையை மோதி கொன்று இருக்கலாம் அல்லது கட்டையால் அடித்து கொன்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இன்ஜினியரிங் படித்து முடித்துள்ள இளவரசன் வெளிநாட்டில் வேலை பார்த்து ஊர் திரும்பி உள்ளார். மேலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.அவர் அரவிந்தை கொலை செய்ய காரணம் என்ன என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நன்னிலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திருவாரூர் அருகே பயங்கரம் உடும்பு பிடிக்க அழைத்து சென்று பள்ளி மாணவன் அடித்து கொலை: இன்ஜினியர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Thiruvarur District Nannilam ,Kuchippalayayayama ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்