×

இங்கிலாந்துடன் முதல் ஒருநாள் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: கேப்டன் ஹோப் அபார சதம்

நார்த் சவுண்ட்: இங்கிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 109 ரன் விளாசி அசத்தினார்.

விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 325 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஹாரி புரூக் 71 ரன் (72 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), கிராவ்லி 48, பில் சால்ட் 45, சாம் கரன் 38, வில் ஜாக்ஸ் 26, பிரைடன் கார்ஸ் 31* ரன் விளாசினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரொமாரியோ ஷெப்பர்ட், குடகேஷ் மோத்தி, ஒஷேன் தாமஸ் தலா 2, அல்ஜாரி ஜோசப், யானிக் கரியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 326 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. அலிக் அதனேஸ் 66, பிராண்டன் கிங் 35, ஷிம்ரோன் ஹெட்மயர் 32, ரொமாரியோ ஷெப்பர்ட் 48 ரன் எடுத்தனர். அபாரமாக விளையாடிய கேப்டன் ஷாய் ஹோப் 109 ரன் (83 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்), அல்ஜாரி ஜோசப் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹோப் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை இரவு 11.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

The post இங்கிலாந்துடன் முதல் ஒருநாள் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: கேப்டன் ஹோப் அபார சதம் appeared first on Dinakaran.

Tags : West Indies ,England ,Captain Hope ,North Sound ,Dinakaran ,
× RELATED உலக கோப்பை டி20 நியூசி. அணி அறிவிப்பு