×

மிக்ஜாம் புயல் பாதிப்பு எதிரொலி: சென்னையில் இருந்து இயக்கப்படும் 25 ரயில்கள் நாளை ரத்து

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பு எதிரொலி காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் 25 ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை அதிவிரைவு ரயில், திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ்,பெங்களூரு செல்லும் டபுள் டெக்கர், பிருந்தாவன் ரயில், லக்னோ விரைவு ரயில், ஷாலிமர் எக்ஸ்பிரஸ், விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ், அகமதாபாத் செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ், எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ், திருச்சி செல்லும் சோழன் ரயில்கள், எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ், சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் சிறப்பு வந்தே பாரத் ரயில்கள், மதுரையில் இருந்து நிஜாமுதின் செல்லும் சம்பர்கிராந்தி, எர்ணாகுளத்தில் இருந்து சென்னை வழியாக பாட்னா செல்லும் ரயில்கள் உள்ளிட்ட ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post மிக்ஜாம் புயல் பாதிப்பு எதிரொலி: சென்னையில் இருந்து இயக்கப்படும் 25 ரயில்கள் நாளை ரத்து appeared first on Dinakaran.

Tags : MIKJAM ,CHENNAI ,MIKJAM STORM ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்