×

தீவிர புயலாக மாறியது மிக்ஜாம்

சென்னை: சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் தீவிர புயலாக வலுவடைந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு 90 கி.மீ. தொலைவில் வடகிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து வடதமிழ்நாடு-தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டி புயல் நகரும். காலையில் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த மிக்ஜாம் புயல், தற்போது 8 கி.மீ. வேகத்தில் குறைந்தது. சென்னைக்கு 90 கி.மீ. தொலைவில் வடகிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. புயல் நகரும் வேகம் குறைந்ததால் சென்னை, திருவள்ளூரில் கனமழை தொடரும். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் கூறியுள்ளது.

The post தீவிர புயலாக மாறியது மிக்ஜாம் appeared first on Dinakaran.

Tags : Mijam ,Chennai ,Mijjam ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?