×

கோஸ் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

தர்மபுரி, டிச.4: தர்மபுரி மாவட்டத்தில் கோஸ் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், சுமார் 100 ஏக்கருக்குமேல் முட்டைகோஸ் சாகுபடி செய்துள்ளனர். முட்டைக்கோஸ் சாகுபடி குறைவான முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய பயிராக விளங்குகிறது. இதனால் விவசாயிகள் ஆர்வத்துடன் பயிர் செய்கின்றனர். முட்டைகோஸ்சுக்கு சந்தையில் நல்லவரவேற்பு உள்ளது.

நேற்று தர்மபுரி உழவர் சந்தையில், ஒரு கிலோ ₹20க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், முட்டைகோஸ் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்று. முட்டைகோஸில் கீரையில் உள்ள சத்துக்களான வைட்டமின் ஏ, பி, இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. முட்டைக்கோஸின் பச்சை பகுதியாக உள்ள இலைகளில் தான் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன. சமவெளி பகுதிகளில் இது குளிர்கால பயிராக சாகுபடி செய்யப்படும். இந்த பயிருக்கு வடிகால் வசதி மிகவும் அவசியம். வண்டல், செம்மண் நிலங்களிலும் நன்றாக வளர கூடிய பயிராகும். சமவெளிப்பகுதியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி போன்ற மாதங்களில் சாகுபடி செய்யப்படுகிறது என்றனர்.

The post கோஸ் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Nallampally ,Karimangalam ,Dinakaran ,
× RELATED சிறுமியின் காதலை கண்டித்த தாயின்...