×

₹20 லட்சம் லஞ்சம் வாங்கியவரின் அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த ஈடி அதிகாரிகள்: தல்லாகுளம் போலீசில் டிஎஸ்பி புகார்

சென்னை: ₹20 லட்சம் லஞ்சம் வாங்கியவரின் அறையில் சோதனை போட விடாமல் லஞ்ச ஒழிப்பு போலீசாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தடுத்ததாக போலீசில் டிஎஸ்பி புகார் செய்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில் உள்ள அரசு டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ₹3 கோடி லஞ்சம் கேட்டு ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டவுடன் அவரது அறையில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் சோதனை நடத்த சென்றனர். அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட அனுமதி மறுத்ததோடு, பாதுகாப்பு என்ற பெயரில் மத்திய துணை ராணுவப்படையினரையும் துப்பாக்கியுடன் குவித்தனர். இதனால் பல போராட்டங்களுக்குப் பிறகுதான் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் அறையில் சோதனையிட அனுமதி அளித்தனர்.

இதனால் அவரை பாதுகாக்கவே அதிகாரிகள் முயன்றது தெரியவந்துள்ளது. இந்தநிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரை அமலாக்கத்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் பணி செய்ய விடாமல் தடுத்ததாக மதுரை நகர் தல்லாகுளம் போலீசில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் புகார் செய்துள்ளார். இது குறித்து தல்லாக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் குறித்து டிஜிபிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று புகார் செய்துள்ளனர்.

The post ₹20 லட்சம் லஞ்சம் வாங்கியவரின் அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த ஈடி அதிகாரிகள்: தல்லாகுளம் போலீசில் டிஎஸ்பி புகார் appeared first on Dinakaran.

Tags : ED ,DSP ,Tallakulam police ,Chennai ,Dinakaran ,
× RELATED மாஜி துணை முதல்வர் ஜாமீன் கோரிய மனு...