×

சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் அகோர மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. நவகிரகங்களின் புதன் ஸ்தலமாக விளங்கக்கூடிய இக்கோயிலில் அகோரமுகம் கொண்டு சிவபெருமான் அகோர மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாளித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அன்று அகோர மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழாவையொட்டி காலை காவேரி ஆற்றில் இருந்து சிவாச்சாரியர்கள் புனித நீரை ஊர்வலமாக எடுத்து வந்தன மாலை சந்திர தீர்த்த குளத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து சென்றனர். இரவு சுவாமிக்கு பால் உள்ளிட்ட பல்வேறு மங்கள பொருட்களை கொண்டு மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு 12 மணிக்கு அகோர பூஜையுடன் தீபாராதனை நடைபெற்றது. அப்போது தேவார இன்னிசை நாதஸ்வர கச்சேரி நடைபெற்றன.

The post சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் அகோர மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Agora Murthy ,Suvedaranyeswarar Temple ,Sirkazhi ,Brahma ,Vidyambikai ,Sametha ,Suvedharanyeswarar temple ,Thiruvengat ,Mayiladuthurai district ,Mercury ,Navagrahas ,
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!