×
Saravana Stores

அமலாக்கத்துறையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ஜி.கே.வாசன்

விழுப்புரம்: தமாகா தலைவர் ஜி.கே. வாசன் விழுப்புரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ஆட்சியாளர்களுக்கும், ஆளுநர்களுக்கும் கருத்து வேறுபாடு தனிப்பட்டை முறையிலும், எந்தவிதமான காழ்ப்புணர்ச்சி உணர்வோடும் இருக்கக்கூடாது. மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு மாநிலத்தின் வளர்ச்சியை செயல்படுத்தவேண்டும். அமலாக்கத்துறையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். விசாரணை தேவை, உண்மையிருந்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துகிடையாது. நாடாளுமன்றம் இன்று துவங்கும் நிலையில் எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம். நான்கு மாநில தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது காங்கிரஸ் ஆட்சிபுரிந்த 2 பெரிய மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றிருக்கிறது. அப்படியென்றால் வடஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தலில் ஒன்றியத்தில் நடக்கின்ற ஆட்சிக்கு செல்வாக்கு இருக்கின்றது என்பதை நிரூபித்திருக்கிறார்கள். தேர்தலின்போது தமாகாவின் உயர்மட்ட கூட்டம் கூடி முடிவெடுத்து கூட்டணி முடிவை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

The post அமலாக்கத்துறையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ஜி.கே.வாசன் appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,Villupuram ,Tamaga ,G.K. Vasan ,
× RELATED முரசொலி செல்வம் மறைவு: திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன் இரங்கல்