×

எச்சரிக்கை அறிவிப்பையும் மீறி கடல் சீற்றத்தில் செல்பி எடுத்த இளைஞர்கள்

சென்னை: காசிமேடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்தின் அருகில் நின்று, ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சிலர் செல்பி எடுத்தனர். மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. பாதுகாப்பு கருதி, பொதுமக்களும் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். ஆனால், எவ்வளவோ எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், காசிமேடு மின்பிடி துறைமுக வார்ப்பு பகுதியில் பாறைகள் மீது மோதி சிதறும் அலையின் அருகே நின்று செல்பி எடுக்க நேற்று காலையிலேயே இளைஞர்கள் ஆர்வமுடன் குவிந்தனர்.

ஆபத்தை உணராமல் செல்பி மோகத்தால் கடல் சீற்றத்தின் அருகில் நின்று அவர்கள் செல்பி எடுத்தனர். இப்பகுதியில் போலீசாரை கண்காணிப்பு பணியில் அமர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.  இன்று கடல் சீற்றம் கடுமையாக இருக்கும் என்பதால் இளைஞர்கள் கடற்கரை பகுதிக்கு செல்லவிடாமல் பெற்றோர் தடுக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post எச்சரிக்கை அறிவிப்பையும் மீறி கடல் சீற்றத்தில் செல்பி எடுத்த இளைஞர்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kasimedu ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!