×

திசை மாற்றி டிமிக்கி கொடுத்த மிக்ஜாம்

சென்னை: உலக வானிலை அமைப்பில் உள்ள 13 நாடுகள் புயலுக்கு பெயர்களை சூட்டும் உரிமை பெற்றுள்ளன. அதில் வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. 2023ம் ஆண்டுக்கான 169 புயல்களுக்கு இந்த நாடுகள் பெயர் சூட்டியுள்ளன. இந்த ஆண்டில் வங்கக் கடலில் வந்த புயல்களில் மிக்ஜாம் என்பது 4வது புயல். இந்த புயலுக்கு மியான்மர் நாடு பெயர் சூட்டியது. பெயர் சூட்டும் போது, இந்த புயல் மியான்மர் நோக்கி வரும் என்று கூறித்தான் மியான்மர் பெயர் வைத்தது. ஆனால், உலக வானிலை ஆய்வாளர்கள் மியான்மரின் இந்த கருத்தை ஏற்க மறுத்து, ‘‘2023 நவம்பர் மாதம் உருவாகும் இந்த புயல் வடமேற்கு திசையில் பயணித்து, தெற்கு ஆந்திரா பகுதியில் கரை கடந்து மேற்கு நோக்கி நகர்ந்து கர்நாடகாவுக்கு செல்லும், பின்னர் அது அரபிக் கடல் நோக்கி பயணிக்கும்’’ என்றும் தெரிவித்தனர்.

ஆனால், நேற்று வலுப்பெற்று புயலாக மாறிய மிக்ஜாம், சென்னையில் கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் அது வடக்கு வடமேற்காக நகர்ந்து சென்று ஆந்திராவின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மியான்மர் கணித்தபடியும் செல்லாமல், உலக வானிலை ஆய்வாளர்கள் கணித்தபடியும் அல்லாமல் மிக்ஜாம் புயல் தற்போது டிமிக்கி கொடுத்துவிட்டு ஆந்திரா வழியாக ஒடிசா செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post திசை மாற்றி டிமிக்கி கொடுத்த மிக்ஜாம் appeared first on Dinakaran.

Tags : Timmy ,Chennai ,World Meteorological Organization ,Bangladesh ,India ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!