×

சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கு மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்கென இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் நியமனம்

சென்னை: புயல் முன்னெச்சரிக்கை பணிகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்காக நியமனம். சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்துள்ளது. மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 7.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு – தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 330 கிமீ தெற்கு – தென்கிழக்காகவும் ஆகவும் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் வலுவடைந்து 4.12.23 திங்கட்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது விவரம் பின்வருமாறு:

1. மண்டலம் -1 .கே.எஸ். கந்தசாமி, ,மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்

2. மண்டலம் -2 .எஸ். திவ்யதர்ஷினி, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம்

3. மண்டலம் -3 . சங்தீப் நந்தூரி, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்

4. மண்டலம் -4 டாக்டர். எஸ். பிரபாகர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு நகரப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்.

5. மண்டலம் -5 டாக்டர்.கே. விஜய கார்த்திகேயன், , இணை மேலாண்மை இயக்குநர், மாநில மனித உரிமை ஆணையம்

6. மண்டலம் -6 பி. கணேசன், இயக்குநர், நகர ஊரமைப்பு இயக்ககம்

7. மண்டலம் -7 டாக்டர். எஸ். சுரேஷ் குமார், முதன்மைச் செயல் அலுவலர் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்

8. மண்டலம் -8 எஸ். பழனிச்சாமி, மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்.

9. மண்டலம் -9 எம். பிரதாப், துணைச் செயலாளர், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை

10. மண்டலம்-10 எஸ். அருண்ராஜ், நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு மிண்ணணு கழகம்

11. மண்டலம்-11 இ. சுந்தரவள்ளி ஆணையர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை

12. மண்டலம்-12 ஏ.கே. கமல் கிஷோர், இயக்குநர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

13 மண்டலம்-13 எம்.எஸ். பிரசாந்த், கூடுதல் இயக்குநர் (பொது) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

14 மண்டலம்-14 வி.ஆர். சுப்புலட்சுமி, இணை ஆணையர், வணிக வரித் துறை

15. மண்டலம் – 15கொ. வீரராகவ ராவ், ஆணையர், தொழில்நுட்ப கல்வி இயக்ககம்

16. தாம்பரம் மாநகராட்சி ஜான் லூயிஸ், மேலாண்மை இயக்குநர்,, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்

17. ஆவடி மாநகராட்சி ஏ.சண்முக சுந்தரம், போக்குவரத்து ஆணையர்,

மீட்புப் பணிகள் மற்றும் பிற உதவிகளுக்கென 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1913 (சென்னை மாநகராட்சி), 18004254355, 18004251600 (தாம்பரம் மாநகராட்சி) மற்றும் 18004255109ஐ (ஆவடி மாநகராட்சி) தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

The post சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கு மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்கென இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Indian Regimental ,Chennai ,Tambaram ,Avadi ,Tamil Nadu government ,IAS ,Thambaram ,Tambaram and Avadi Municipalities ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!