×

மிக்ஜம் புயல் காரணமாக டிசம்பர் 4, 6ம் தேதி நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், அறிவிக்கை எண் 34/2022 ல் அறிவித்தபடி கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான, நேர்முகத் தேர்வினை கடந்த 22.11.2023 முதல் நடத்தி வருகிறது. நேர்முகத் தேர்வுக்கான எஞ்சிய இரண்டு நாட்கள் (04.12.2023 முப மற்றும் பிப மற்றும் 06.12.2023 மு.ப) உள்ள நிலையில், தமிழக அரசு, மிக்ஜம் (MICHAUNG) புயல் காரணமாக வருகிற திங்கட்கிழமையினை (04.12.2023) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு, பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வு நாளில் கீழ்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன..

வரும் திங்கள் கிழமை (04.12.2023) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திங்கட்கிழமை (04.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு வரும் 06.12.2023 புதன் கிழமைக்கும், புதன் கிழமை (06.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு வரும் வியாழக்கிழமை (07.12.2023) அன்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எனவே திங்கட்கிழமை (04.12.2023) அன்று நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வரும் புதன் கிழமை (06.12.2023). அன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள நேர்முகத்தேர்விலும். புதன் கிழமை (06.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வியாழக்கிழமை (07.12.2023) அன்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ள நாளில் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

The post மிக்ஜம் புயல் காரணமாக டிசம்பர் 4, 6ம் தேதி நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : DNPSC ,Mikjam ,Chennai ,Tamil Nadu Government Personnel Selection Committee ,Dinakaran ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...