×

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் சரிவு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இன்று காலை ஒரு கிலோ மல்லி மற்றும் ஐஸ் மல்லி 800க்கும் கனகாம்பரம் 300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோல் முல்லை, ஜாதிமல்லி 600க்கும் சாமந்தி 40க்கும் சம்பங்கி 50 க்கும் பன்னீர்ரோஸ் 30க்கும் சாக்லேட் ரோஸ் 40க்கும் அரளி பூ 150க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறியதாவது;

கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் வரத்து குறைவு மற்றும் கனமழை பெய்து வருவதால் பூக்களை வாங்க சென்னை புறநகர் வியாபாரிகள், பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு வராததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. இதன்காரணமாக பூக்கள் விலை குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் , விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். நாளை புயல் உருவாகி உள்ளதால் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மார்க்கெட்டுக்கு சென்னை புறநகர் வியாபாரிகள் பூக்களை வாங்க வருவார்களா என்பது சந்தேகம்தான். இவ்வாறு கூறினார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் சரிவு appeared first on Dinakaran.

Tags : Koyambedu market ,Annanagar ,Koyambedu ,Chennai ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...