×

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவு!

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தான் போட்டியிட்ட கம்மாரெட்டி, கஜ்வல் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில், மிசோரம் மாநிலத்தை தவிற மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்து முன்னிலை வகித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக 124 இடங்களிலும், காங்கிரஸ் 94 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 86 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

தெலங்கானாவில் காங்கிரஸ் 62 இடங்களிலும், ஆளும் பி.ஆர்.எஸ் 36 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார். முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தான் போட்டியிட்ட கம்மாரெட்டி, கஜ்வல் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார். தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களையும் தாண்டி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

 

The post தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவு! appeared first on Dinakaran.

Tags : Telangana ,Chief Minister ,Chandrashekara Rao ,Kammareti ,Gajwal ,Chhattisgarh, Central ,
× RELATED பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த...