×

தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்: ராஜஸ்தான், மத்தியப்பிரதேசத்தில் பாஜக முன்னிலை..!

ஹைதராபாத்: தெலங்கானாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவதால் கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் நான்கு மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோராம் சத்திஷ்கர், ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. மிசோரம் தவிர்த்த நான்கு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் தற்போதைய நிலவரப்படி சத்திஷ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. சத்திஷ்கரில் 48 இடங்களில் காங்கிரசும், 42 இடங்களில் பாஜகவும் முன்னிலை வகித்து வருகிறது. ராஜஸ்தானில் 108 இடங்களில் பாஜகவும், 75 இடங்களில் காங்கிரசும், மற்றவை 22 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. மத்தியப்பிரதேசத்தில் 142 இடங்களில் பாஜகவும், 85 இடங்களில் காங்கிரசும், மற்றவை 3 இடங்களிலும் முன்னிலை வகிர்த்து வருகிறது.

தெலங்கானாவில் 64 இடங்களில் காங்கிரசும், பி.ஆர்.எஸ்.41 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் மற்றவை 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. தெலங்கானாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவதால் கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்: ராஜஸ்தான், மத்தியப்பிரதேசத்தில் பாஜக முன்னிலை..! appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Rajasthan, Madhya Pradesh ,Hyderabad ,Telangana ,
× RELATED இலக்கு வைத்த பாஜக மிகப்பெரிய சரிவை...