×

மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும்: சிவராஜ் சிங் சவுகான் எக்ஸ் தளத்தில் பதிவு

போபால்: மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என சிவராஜ் சிங் சவுகான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் நான்கு மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தெலங்கானா , மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோராம் சத்திஷ்கர், ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. மிசோரம் தவிர்த்த நான்கு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக மத்தியப் பிரதேசத்தை பொறுத்தவரை பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

காலை 10.30 மணி நிலவரப்படி 136 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 89 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலை வகிர்த்து வருகிறது. தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில் இப்போது இருந்தே தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்று பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரும், அம்மாநில முதலைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும்: சிவராஜ் சிங் சவுகான் எக்ஸ் தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Madhya Pradesh ,Sivraj Singh ,X ,Bhopal ,Shivraj Singh ,
× RELATED மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசை...