×

பெட்டைக்குளத்தில் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

திசையன்விளை,டிச.3: பெட்டைக்குளம் எஸ்.எம்.காதர் மீரா சாகிபு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. தமிழக சபாநாயகர் அப்பாவு தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார்.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார ஆய்வாளர் ராமசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி வரவேற்றனர். வள்ளியூர் வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் திட்ட விளக்க உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் உறுமன்குளம் ஊராட்சி தலைவர் வைகுண்டம் பொன்இசக்கி, கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வாழவந்தகணபதி பாலன், நவ்வலடி சரவணகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் கெனிஸ்டன், திருநெல்வேலி அறங்காவலர் குழு உறுப்பினர் சமூகை முரளி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமெச்சியார், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஞானராஜ், ஏசுவடியான், உறுமன்குளம் நாராயணன், இசக்கிமுத்து, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராம் கிஷோர் பாண்டியன், திசையன்விளை நகர இளைஞரணி செயலாளர் நெல்சன், பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா, எழில், காமில், முத்தையா, சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பெட்டைக்குளத்தில் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Vector, DC3 ,Box ,S M. Khadar Meera Sakhibu Secondary School ,Kapoom Medical Camp ,Tamil Nadu ,Camp ,Dinakaran ,
× RELATED சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டி வசதி!