×

இன்று 4 மாநில தேர்தல் ரிசல்ட் கர்நாடக துணை முதல்வர், 6 பேர் ஐதராபாத் பயணம்: காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாக்க திட்டம்

பெங்களூரு: தெலங்கானா காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதற்காக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் 7 பேர் அடங்கிய குழு ஐதராபாத்துக்கு சென்றுள்ளது. தெலங்கானா உள்பட 4 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்படுகின்றன. தெலங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அங்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் என்ன செய்வது என்பது குறித்த ஆலோசனையை இரு கட்சிகளுமே தொடங்கிவிட்டன.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விலை கொடுத்து வாங்கப்படுவதை தடுப்பதற்காக, இதுபோன்ற விவகாரங்களை ஏற்கனவே கையாண்டு ஆட்சியை காப்பாற்றிய அனுபவம் வாய்ந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று ஐதராபாத்துக்கு சென்றார். இவருடன் அமைச்சர் ஜமீர் அகமது கான் உட்பட 7 பேர் சென்றுள்ளனர். தேவைப்பட்டால் தெலங்கானா தேர்தலில் வெற்றி பெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூரு அழைத்து வரப்பட்டு பாதுகாக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரிசார்ட் அரசியலா?
துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், ‘2017ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலின் போது 44 குஜராத் எம்எல்ஏக்களை பெங்களூருக்கு அழைத்து வந்து தங்கவைத்தேன். குதிரை பேரத்தை தடுக்க கட்சி மேலிடம் சொன்னதால் செய்தேன். ஆனால் தெலங்கானாவில் அப்படி ஒரு நிலை ஏற்படாது. எந்த எம்எல்ஏவும் எங்கும் போக வேண்டிய அவசியமில்லை. அதே போல் என்னை யாரும் அழைத்து பொறுப்பும் வழங்கவில்லை.

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் தனிக்கட்சியாக உருவெடுக்கும். தெலங்கானா காங்கிரஸ் கட்சியினரே அனைத்தையும் சமாளித்து கொள்வார்கள். குதிரை பேரத்தை தடுக்க என்னை ஐதராபாத் செல்லுமாறு கட்சி மேலிடமோ அல்லது தலைவர்களோ சொல்லவில்லை. ஆனால் குஜராத் மாதிரியான சூழல் வரும் போது கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதை செய்வேன்’ என்றார்.

The post இன்று 4 மாநில தேர்தல் ரிசல்ட் கர்நாடக துணை முதல்வர், 6 பேர் ஐதராபாத் பயணம்: காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Deputy Chief Minister ,Hyderabad ,Congress ,Bengaluru ,TK Sivakumar ,Telangana ,Dinakaran ,
× RELATED கர்நாடக அரசை கவிழ்க்க கேரள கோயிலில்...