×

திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி பிறந்தநாள் விழா

 

நாகர்கோவில், டிச.3: குமரிமாவட்ட திராவிடர் கழகம் சார்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 91 வது பிறந்த நாள் விழா திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பெரியார், திக தலைவர் கி.வீரமணி நூல்கள் வழங்கப்பட்டன.

திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். திக காப்பாளர் பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் நல்லபெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவதாணு, செயலாளர் பெரியார்தாஸ், இலக்கிய அணி செயலாளர் பொன்னுராசன், இளைஞர் அணி தலைவர் ராஜேஷ், தோவாளை ஒன்றிய தலைவர் ஆறுமுகம், மாநகர செயலாளர் சேகர், துணைத் தலைவர் செய்க்முகமது, பாலகிருஷ்ணன், குமரிச்செல்வர் மற்றும் பெரியார் பற்றாளர்கள் பங்கேற்றனர்.

The post திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Tags : K. Veeramani ,Dravidar Kazhagam ,Nagercoil ,President ,Kumarimavatta ,Dinakaran ,
× RELATED ஜனநாயகம் பொலிவு பெற பாஜக-வை...