×

பயன்படுத்த முடியாத நிலையில் பயமுறுத்தும் காவலர்கள் குடியிருப்பு

காளையார்கோவில், டிச.3: காளையார்கோவில் காவலர்கள் குடியிருப்பு பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது எந்த பயன் பாடும் இல்லாமல் பாழடைந்த நிலையில் உள்ளது. காளையார்கோவில் காவலர்கள் குடியிருப்பு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது குடியிருப்பு கட்டிடங்கள் முழுவதும் சேதம் அடைந்தும், ஓடுகளினால் அமைக்கப்பட்ட மேற்கூரைகள் முழுவதும் உடைந்த நிலையில் உள்ளதால் காவலர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் நடமாட்டத்தில் உள்ள இப்பகுதியில் பாழடைந்த குடியிருப்பு வீடுகளில் இருந்து அதிகளவில் விஷப்பூச்சிகளின் அச்சுறுத்தல் உள்ளது.

எனவே பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட காவலர் குடியிருப்பை இடித்து விட்டு அதிகளவில் காவலர்கள் தங்கும் வகையில் அனைத்து வசதிகளும் கூடிய காவலர் குடியிருப்பு கட்டித்தர வேண்டும். குடியிருப்பை சுற்றிலும் மதில் சுவர் எடுக்க வேண்டும். வளர்ந்து வரும் காளையார்கோவிலில் பகுதிகளில் ஏற்படும் குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதல் காவலர்களை பணி அமர்த்தி அவர்கள் தங்குவதற்கான குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பயன்படுத்த முடியாத நிலையில் பயமுறுத்தும் காவலர்கள் குடியிருப்பு appeared first on Dinakaran.

Tags : Kalayarkoil ,
× RELATED காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம்