×

சிறுதானியங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்

பரமக்குடி,டிச.3: பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. சிறுதானியங்கள் என்பது சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி ஆகிய பயிர்கள் சிறுதானியங்களாகும். இதன் முக்கியத்துவம் மக்களிடம் குறைந்தே காணப்படுகிறது. சாகுபடி பரப்பளவு குறைந்து கொண்டு வந்தாலும் தானியங்களின் ஊட்டச்சத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு, பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள புதிய சிறுதானிய ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளது. சிறுதானிய ரகங்களை வேளாண்மையை பாடமாக எடுத்து படிக்கும் பள்ளி மாணவ,மாணவிகள் நேற்று பார்வையிட்டனர். இவர்களுக்கு சிறுதானியங்களின் முக்கியத்துவத்தினை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் மற்றும் தலைவர் முத்துராமு விளக்கி கூறினார். இந்த நிகழ்ச்சியில், முதுநிலை வேளாண்மை அலுவலர் சந்திரசேகரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post சிறுதானியங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Paramakudi Agricultural Research Station ,India ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி