×

மத்திய பஸ் நிலையத்தில் அத்துமீறும் காதல் ஜோடிகள்

 

திருப்பூர், டிச.3: திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். மேலும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சில காதல் ஜோடிகள் பஸ் நிலையத்தில் வெளிப்படையாக முகம் சுளிக்கும் வகையில் ஆபாசமாக காதல் செய்து வருகின்றனர். மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் முகம் சுளிக்கும் விதமாக இவர்களின் காதல் லீலைகள் அத்துமீறி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை பஸ் நிலையத்தின் மையப்பகுதியில் காதல் ஜோடிகள் அத்துமீறியதை கண்ட பொதுமக்கள் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.

The post மத்திய பஸ் நிலையத்தில் அத்துமீறும் காதல் ஜோடிகள் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur Central Bus Station ,
× RELATED திருமூர்த்தி குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு