×

பால்கொள்முதல் விலை உயர்த்தப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

மன்னார்குடி: பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெகு விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பால்வளத்துறை நசிந்து கிடந்தது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் அதனை மீட்டெடுத்துள்ளோம். கறவை மாடுகள் வாங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை ஏற்பாடு செய்து அதன் மூலம் பால் உற்பத்தியை பெருக்குவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும். இதற்கான அறிவிப்பை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார். மன்னார்குடியில் மினி பால் பண்ணை அமைக்கப்படும். இங்கு பால் உப பொருட்களை மதிப்பு கூட்டு பொருட்களாக தயாரிக்கும் ஆலையும் விரைவில் அமைக்கப்படும்,’என்றார்.

The post பால்கொள்முதல் விலை உயர்த்தப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Mano Thangaraj ,Mannargudi ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED வறட்சியிலும் ஆவின் பால் கொள்முதல் 31...