×

ஜி.கே.வாசன் வேண்டுகோள் மழை, புயல் சார்ந்த பணிகளுக்கு போர்க்கால நடவடிக்கை தேவை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:மிக்ஜம் புயலால் 12 மாவட்டங்களுக்கு கன மழை, மிக கனமழை இன்னும் 3 நாட்களுக்கு பெய்யும் என்று செய்திகள் வருகிறது. எனவே தமிழக அரசும், கலெக்டர்களும், சென்னை மாநகராட்சி நிர்வாகமும், புயல், மழை நடவடிக்கை பணிகளை இடைவிடாமல் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். சாதாரண சூழல் ஏற்படும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, இருப்பிடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.  பாதிக்கப்படும் மக்களை அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

The post ஜி.கே.வாசன் வேண்டுகோள் மழை, புயல் சார்ந்த பணிகளுக்கு போர்க்கால நடவடிக்கை தேவை appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,CHENNAI ,Tamaka ,President ,G.K. ,Vasan ,Mijam ,Dinakaran ,
× RELATED மாநிலம் முழுவதும் சாலையை சரிசெய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்