×

சென்னையில் பயணிகளின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களின் பயண நேரங்கள் மாற்றியமைப்பு

சென்னை: ஞாயிற்றுக்கிழமைகளுக்கான மெட்ரோ இரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ இரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பழைய அட்டவணையின் படி, காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

நாளை (03.12.2023) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ இரயில் சேவைகள் பின்வரும் புதிய நேர அட்டவணையின் படி இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். மெட்ரோ இரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் பயணிகளின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களின் பயண நேரங்கள் மாற்றியமைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metro Railway Company ,Dinakaran ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!