×

புயலை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: மிச்சாங் புயலை எதிர்கொள்ள மாநிலம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் சென்னைக்கு 780 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாறும் என்றும், அது மேலும் வலுப்பெற்று நாளை புயலாக மாறி, 4ம் தேதி மாலை அல்லது 5ம் தேதி அதிகாலையில் தேதி சென்னை-மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மின்தடை ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயல் நேரத்தில் மின்கசிவு உள்ளிட்ட காரணங்களால் எந்தவொரு இடத்திலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். குடிநீர் விநியோகம், தகவல் தொடர்பு, மின்விநியோகம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

புயலை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளது. புயல் நேரத்தில் மின்விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய 15,300 ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். மின்வாரிய அலுவலர்கள் செயற்பொறியாளர் அலுவலகத்தில் குழுக்களாக பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கூடுதலாக களப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு கூறினார்.

The post புயலை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,South Russia ,Chennai ,National Disaster Rescue Team ,K. K. S. S. R. Ramachandran ,Electricity Board ,Minister Gold ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்