×

வங்கக்கடலில் வலுபெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… 24 மணி நேரத்தில் புயலாக மாறுகிறது : புதிய அப்டேட்டை வெளியிட்டது வானிலை மையம்

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நேற்று முன்தினம் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும். சென்னைக்கு 510 கிமீ கிழக்கு – தென் கிழக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு 500 கிமீ கிழக்கு தென் கிழக்கிலும் நெல்லூருக்கும் 630 கிமீ தென் கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது.

பாபட்லாவிற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 710 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 700 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டது.வங்கக் கடலில் மணிக்கு 11கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 9 கி.மீ-ஆக குறைந்தது. நாளை தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும். பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து 4ம் தேதி மாலை அல்லது 5ம் தேதி அதிகாலையில் மிக்ஜம் புயல் தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளில் சென்னை-மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post வங்கக்கடலில் வலுபெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… 24 மணி நேரத்தில் புயலாக மாறுகிறது : புதிய அப்டேட்டை வெளியிட்டது வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Bank ,weather ,Chennai ,Bank Sea ,Weather Centre ,Dinakaran ,
× RELATED தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு...