×

“மிகவும் மோசம்” பிரிவிற்கு சென்றது காற்று மாசு.. எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி : டெல்லி மக்கள் சோகம்

புதுடெல்லி: டெல்லியில் மீண்டும் காற்றின் மாசு ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவை எட்டியுள்ளது. டெல்லியில் இம் மாதம் தொடக்கத்தில் காற்று மாசு ‘மிகவும் கடுமை’ என்ற பிரிவுக்கு சென்றதால், காற்று தர மேலாண்மை செயல் திட்டத்தின் கீழ் ‘கிராப்- 4ம் நிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இந்த மோசமான காற்று மாசுவால் மக்களின் உடல்நிலை பாதித்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 10 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு திடீரென பெய்த மழையாலும், வேகமான காற்றாலும் மாசு குறைந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை வரையில் கடந்த 10 நாட்களாக ‘மிகவும் மோசம்’ என்ற மிதமான பிரிவில் காற்று மாசு இருந்து வந்தது.

குளிர்கால பனிமூட்டமும் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியாக உடற்பயிற்சி, நடைபயிற்சிகள் செய்தனர். ஆனால் மக்களின் நிம்மதியை குலைக்கும் வகையில் டெல்லியின் சில பகுதிகளில் நேற்று மீண்டும் கடுமையான பிரிவிற்கு காற்று மாசு சென்றது. இதனால், கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அஞ்சப்பட்டது. இந்த நிலையில் ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெல்லியில் சில பகுதிகளில் காற்று மாசு ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவுக்கு சென்றுள்ளது. ஆனந்த் விகார், அசோக் விகாரில் முறையே 388, 386 புள்ளிகளாக காற்று மாசு பதிவாகி இருக்கிறது. லோதி சாலை 349, நேரு மைதானம் 366,’ என கூறப்பட்டுள்ளது.

The post “மிகவும் மோசம்” பிரிவிற்கு சென்றது காற்று மாசு.. எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி : டெல்லி மக்கள் சோகம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,NEW DELHI ,
× RELATED வரிச்சலுகை பெறுவதற்கு ஆப்பு வீட்டு...