×

திண்டுக்கல்லில் கூட்டுறவு பண்டக சாலைக்கான கட்டிட அடிக்கல் நாட்டு விழா: அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்பு

 

திண்டுக்கல், டிச. 2: திண்டுக்கல்லில் அபிராமி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் சுய சேவை பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்றார். திண்டுக்கல்லில் அபிராமி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் சுய சேவை பிரிவுக்கான கட்டிடம் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன், துணைப் பதிவாளர்கள் வெங்கட், லட்சுமி, மதி, அன்புக்கரசன், பண்டக சாலையின் துணைப் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பாலமுருகன், மாவட்ட துணைச் செயலாளர் பிலால் உசேன், பொருளாளர் சத்தியமூர்த்தி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பண்டகசாலை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் கூட்டுறவு பண்டக சாலைக்கான கட்டிட அடிக்கல் நாட்டு விழா: அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Foundation ,Dindigul ,Minister ,I. Periyasamy ,Abirami Cooperative Wholesale Trade Road ,Road ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா